Thursday, February 10, 2011

கூகிள் இனைய அகராதி ஆங்கிலம் - தமிழ்

வருகைக்கு நன்றி!
 நாம் இணையத்தில் உலாவிக்கொண்டிருக்கும்போது சில ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் ஒவ்வொரு வாக்கியங்களை தெளிவாக அறிய இயலாமல்  குழப்பிக்கொள்வோம். அச்சமயத்தில் நாம் நமது Dictionary ஐ புரட்டிக்கொண்டிருந்தாள் நேரம்தான் வீணாக கழியும். இது போன்ற நேரங்களில் இனைய அகராதியை பயன்படுத்தினால் நமக்கு வேலையும் குறையும் நேரம் வீணாகாமல் விரைவாகவும் பணியாற்றலாம். இந்த பதிவின் மூலம் அறிமுகப்படுத்தும் அகராதி கூகிளின் இனைய அகராதியைதான். இது மிகவும் வேகமாக லோட் ஆகி விரைவில் பதிலை தருகிறது. இந்த அகராதியை பயன்படுத்த www.google.com/dictionary என்ற முகவரிக்கு செல்லவும். இந்த முகவரிக்கு சென்றவுடன் English dictionary என்பதற்கு முன்பிருக்கும் கீழ்நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்து தேவையான மொழியை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும். ஆங்கிலம் வழி தமிழ் மற்றும் தமிழ் வழி ஆங்கிலம் மட்டுமல்லாமல் மேலும் பல மொழிகளும் உள்ளன.
மொழியை தேர்வு செய்வதற்கான உதவிப்படங்க்களை கீழே தோன்ற செய்திருக்கிறேன் உதவிக்கு காணவும்.



ஆங்கிலம் வழி தமிழ் தேர்வு செய்வதற்கான உதவி படம்.






தமிழ் வழி ஆங்கிலம் தேர்வு செய்வதற்கான உதவிப்படம்.





இந்த அகராதியை பயன்படுத்தி பார்க்கவும். பதிவு பிடித்திருந்தால் கருத்துரையிடவும்.
                                                                                 நன்றி!